100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம்
100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம்
ADDED : மார் 20, 2026 07:34 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நுாறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம் நடந்தது.
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், தேர்தலை நேர்மையான முறையிலும், 100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், நமது இலக்கு நுாறு சதவீத ஓட்டுப்பதிவு' என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனை, துணை கலெக்டர் துணை மாவட்ட தேர்தல் அதிகாரி கண்ணபிரான் துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் மதிவாணன் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கையெழுத்தி இயக்கத்தில், 300 மாணவியர் கலந்து கொண்டு நுாறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.
கல்லுாரியின் நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியமேரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இந்த கையெழுத்து இயக்கப் பிரசாரம், பாரதிதாசன் மகளிர் கல்லுாரியினை தொடர்ந்து, மதியம் தொண்டமாநத்தத்தில் உள்ள கிரைஸ்ட் தொழில் நுட்பக் கல்லுாரியில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ஓம் முருகதாசன் மற்றும் பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். 150மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
