தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக உடற்காய தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபயணம்

உலக உடற்காய தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபயணம்

உலக உடற்காய தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபயணம்


ADDED : அக் 18, 2024 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக உடற்காய தினத்தையொட்டி, நகர பகுதியில் 5 கி.மீ., தொலைவிற்கு விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

ஆண்டுதோறும் அக்., 17ம் தேதி உலக உடற்காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி ஜிப்மர், போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசார் சார்பில் 5 கி.மீ., துாரம் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

கடற்கரை சாலை காந்தி திடலில் அதிகாலை 5:00 மணிக்கு நடைபயணத்தை ஜிப்மர் கண்காணிப்பாளர் துரைராஜன், எஸ்.பி., செல்வம், தலைமை செவிலியர் அதிகாரி சங்கரீஸ்வரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நடையபயணம் கடற்கரை சாலை, அதிதி ஓட்டல், அண்ணாசாலை, ரயில்நிலையம், புல்வார்டு பகுதி, தொடர்ந்து கடற்கரை சாலையில் காந்தி திடலில் முடிந்தது.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜிப்மர் செவிலிய மாணவிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை தினமலர் நாளிதழ், போத்தீஸ், புஷ்பா ஜூவல்லரி, ஏ.சி.எம்.இ., பிட்னஸ், சாஸ்தா ஆரஞ்சு சர்ஜிக்கல், ஈவ்ஸ் ரோட்டரி கிளப், சுரபி வெப் டெக்னாலஜி இணைந்து செய்திருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us