/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த அட்சதை வழங்கும் பணி
/
அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த அட்சதை வழங்கும் பணி
ADDED : ஜன 07, 2024 05:05 AM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அட்சதையை கொடுக்கும் பணியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டுள்ள அட்சதையை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட முத்தமிழ் நகர், அருந்ததிபுரம், ராஜா நகர், அய்யனார் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்லும் பணியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ் தலைமை தாங்கினார்.
சாம்ராஜ், பிரபு அந்துவான், ஜெயபிரகாஷ் நாராயணன், சக்திவேல், ஓம் சக்தி ரமேஷ், ராஜேந்திரன், வெற்றிவேல், அசோக், சுகுமார், தேன்மொழி, கீதா, செல்லம்மாள், லட்சுமி, அகிலா, பிரியா, இலக்கியா உட்பட பலா் பங்கேற்றனர். மேலும் உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சில்வர் தட்டுடன் அட்சதை மற்றும் ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் , செந்துாரம், ராமர் கோவில் படம் அடங்கிய வருட நாள்காட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
முன்னதாக ராமஜென்ம பூமி கோவில் கும்பாபிஷேக மகத்துவத்தை போற்றும் வகையில் டிஜிட்டல் திரை அடங்கியவாகனம் தொகுதி முழுவதும் வலம் வருகிறது.