/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரம்பரிய பொருட்களுடன் ஆயுத பூஜை வழிபாடு
/
பாரம்பரிய பொருட்களுடன் ஆயுத பூஜை வழிபாடு
ADDED : அக் 12, 2024 02:39 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பாரம்பரிய பொருட்களை காட்சிப்படுத்தி நடந்த ஆயுதபூஜையில் கொண்டாட்டம், பார்வையாளர்களை கவர்ந்தது.
புதுச்சேரி சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் அய்யனார். இவர் சாமிப்பிள்ளை தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் ஆயுத பூஜையை கொண்டாடினார்.
இதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சேகரித்து வைத்த மற்றும் அவரது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய புழங்கு பொருட்களான, பித்தளை, வெண்கலம், செம்பு மற்றும் மரத்தாலான பொருட்களை வீட்டில், காட்சிப்படுத்தி இருந்தார்.
பழங்காலத்தில் பயன்படுத்திய பெரிய பானைகள், குடங்கள், இட்லி பாத்திரங்கள், வாளிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த பொருட்களை ஏரளாமானோர் பார்வையிட்டனர்.