/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆயுர்வேத மருத்துவக்கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
/
ஆயுர்வேத மருத்துவக்கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
ஆயுர்வேத மருத்துவக்கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
ஆயுர்வேத மருத்துவக்கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
ADDED : அக் 18, 2024 06:32 AM

புதுச்சேரி: மாகியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் உதவித்தொகையை உயர்த்தி தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாகியில், ராஜிவ்காந்தி ஆயுர்வேத மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் உதவித்தொகையை, ரூ.5 ஆயிரத்தில் இருந்து, ரூ.20 ஆயிர மாக உயர்த்தி தர வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது:
கடந்த, 2022,ல் முதல்வர் ரங்கசாமி பயிற்சி உதவித்தொகையை உயர்த்தி தருவதாக உறுதி அளித்தார். ஆனால் இரு ஆண்டு களுக்கு பின்னரும், உயர்த்தப்பட்ட உதவித்தொகை எங்களுக்கு வந்து சேரவில்லை.
இந்தாண்டில் கடந்த பிப்ரவரியில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். அப் போது கல்லுாரி முதல்வர் கொடுத்த வாக்குறுதியால் போராட்டத்தை கைவிட்டோம். ஆனாலும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கல்லுாரியின் அலட்சியத்தை கண்டித்தும், உதவித் தொகையை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடவும், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்' என்றனர்.