தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவாக்கம்; 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைவர்; கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவாக்கம்; 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைவர்; கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவாக்கம்; 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைவர்; கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்


ADDED : பிப் 15, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஆயுஷ்மான் பாரத் வே வந்தனா திட்டத்தில் புதுச்சேரியில் 50 ஆயிரம் முதியவர்கள் பயனடைவர் என, கவர்னர் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் வே வந்தனா திட்டம் துவக்க விழாவில், கவர்னர் கைலாஷ் நாதன் பேசியதாவது:

70 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவு படுத்துவதன் மூலம் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி உள்ளோம். இத்திட்டத்தின் கீழ் பொருளாதார உச்ச வரம்பு எதுவும் இல்லாமல் 70 வயதை கடந்த மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறலாம்.

இதன் மூலம் நாடு முழுதும் 6 கோடி பேர் பயன்பெறுவர். புதுச்சேரியில் மட்டும் 50 ஆயிரம் பேர் பயனடைவர். ஏற்கனவே, தேசிய அளவிலான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாக பிரதமரால் 2018ல் துவங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் தற்போது 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களும் பயன் அடையும் விதமாக விரிவு படுத்தப்பட்டு இருக்கிறது.

மருத்துவ சேவை இலவசமாக கிடைப்பதால் இனி அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும். இதய நோய், கேன்சர், மூட்டு வலி, டயாலிசிஸ், ரத்த அழுத்தம் போன்ற நீண்ட நாள் நோய்களுக்கு தேவையான சிகிச்சை இலவசமாக கிடைக்கும்.

இந்த தரமான மருத்துவ வசதிகளை அரசு மருத்துவமனையில் மட்டும் அல்ல, பல தனியார் மருத்துவமனையிலும் பெற முடியும். மூத்த குடிமக்களுக்கு திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். திட்டத்தின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us