/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்
/
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்
ADDED : நவ 18, 2025 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் கார்த்திகை மாத முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
புதுச்சேரி, பாரதிபுரம் ஐயப்பசாமி கோவிலில் கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள், சபரிமலை செல்வதற்காக விரதமிருந்து மாலை அணிந்து கொண்டனர்.
குருசாமிகள் பக்தர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தினர். இதில், புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

