/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரசவத்திற்கு அனுமதித்த பெண் வயிற்றில் குழந்தை இறப்பு: கர்ப்பப் பை அகற்றம்
/
பிரசவத்திற்கு அனுமதித்த பெண் வயிற்றில் குழந்தை இறப்பு: கர்ப்பப் பை அகற்றம்
பிரசவத்திற்கு அனுமதித்த பெண் வயிற்றில் குழந்தை இறப்பு: கர்ப்பப் பை அகற்றம்
பிரசவத்திற்கு அனுமதித்த பெண் வயிற்றில் குழந்தை இறப்பு: கர்ப்பப் பை அகற்றம்
ADDED : நவ 26, 2024 05:58 AM
டாக்டர்கள் மீது புகார்: போலீசார் விசாரணை
புதுச்சேரி: ராஜிவ் காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு வயிற்றிலே குழந்தை இறந்ததால், கர்ப்ப பை அகற்றப்பட்டது. அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது.
அரியாங்குப்பம், மணவெளி, பெரியார் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகள் சவுமியா. இவருக்கும், பண்ருட்டியைச் சேர்ந்த விஜயக்குமாருக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 ஆண்டிற்கு பின் சவுமியா கர்ப்பமடைந்தார்.
தலைப் பிரவசவம் என்பதால், சவுமியா மணவெளியில் உள்ள தாய் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 22ம் தேதி காலை 8:00 மணிக்கு சவுமியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எல்லப்பிள்ளைச்சாவடி ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு சவுமியாவுக்கு பனிக்குடம் உடைந்து விட்டதாக தெரிவித்தனர். அன்று மாலை வரை பிரசவம் ஆகவில்லை. மாலை 6:30 மணிக்கு சவுமியா வயிற்றிலே குழந்தை இறந்து விட்டது. உடனடியாக ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும், இல்லையென்றால் சவுமியாவின் உயிருக்கே ஆபத்து என கூறி அவரது கணவரிடம் கையெழுத்து பெற்றனர்.
அடுத்த சில நிமிடத்தில் சவுமியாவின் கர்ப்ப பையும் சேர்த்து எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சவுமியாவின் குடும்பத்தினர், குழந்தை எப்படி இறந்தது, கர்ப்ப பையை ஏன் எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சரியான பதில் அளிக்கவில்லை. வேறு வழியின்றி ஆபரேஷன் செய்ய அனுமதி அளித்தனர். வயிற்றில் இருந்து இறந்த குழந்தை மற்றும் கர்ப்ப பை அகற்றப்பட்டது.
சவுமியாவின் தந்தை தனது மகளுக்கு சரியான முறையில் மருத்துவம் பார்க்காமல் அலட்சியமாக இருந்ததால் குழந்தை வயிற்றிலே இறந்து விட்டதாகவும், குழந்தைக்கு ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளித்தார். ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.