/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கந்தலான சாலைகளில் 'பேட்ஜ் ஒர்க்' இன்று துவக்கம்
/
கந்தலான சாலைகளில் 'பேட்ஜ் ஒர்க்' இன்று துவக்கம்
ADDED : டிச 16, 2025 04:09 AM
புதுச்சேரி: வடகிழக்கு பருவமழையால் குண்டும், குழியுமான சாலைகளில் 'பேட்ஜ் ஒர்க்' இன்று துவங்குகிறது.
புதுச்சேரி பிராந்தியத்தில் தேசிய நெடுஞ்சாலை 58 கி.மீ., மாநில நெடுஞ்சாலை 26 கி.மீ, மாவட்ட சாலை 185 கி.மீ, கிராம சாலை 175 கி.மீ., என மொத்தம் 444 கி.மீ., துார சாலைகள் உள்ளன.
இந்த சாலைகளை பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் பராமரித்து வருகின்றன.
தேசிய, மாநில மற்றும் மாவட்ட சாலைகள் புதிதாக போடப்பட்டால், அதன் ஆயுள்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக போடப்பட்ட சாலைகள் அனைத்தும் ஓராண்டிற்குள் குண்டும், குழியுமாகி கந்தலாகி அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தி வந்தது.
அதனை தடுக்கம் பொருட்டு புதிதாக போடப்படும் சாலைகளை அதன் ஆயுள்காலத்திற்குள் பழுதடைந்தால், அதனை ஒப்பந்ததாரரே சீரமைக்க வேண்டும் என அரசு கடந்த மூன்றாண்டிற்கு முன் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி, கடந்த மாதம் பெய்த மழையில் கந்தலாகி உள்ள அனைத்து சாலைகளையும் 'பேட்ஜ் ஒர்க்' செய்ய ஒப்பந்ததாரர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதனையொட்டி, கந்தலான சாலைகளை சீரமைக்கம் பணி இன்று முதல் துவங்குகிறது.

