கல்லுாரி மாணவிகளுக்கு இடையே இறகு பந்து போட்டி துவங்கியது
கல்லுாரி மாணவிகளுக்கு இடையே இறகு பந்து போட்டி துவங்கியது
ADDED : நவ 22, 2024 05:44 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பல்கலைக் கழக கல்லுாரிகளுக்கு இடையே மாணவிகளுக்கான இறகு பந்து போட்டி நேற்று துவங்கியது.
கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் செழியன் வீராசாமி போட்டியை துவக்கி வைத்தார். கல்லுாரியின் விளையாட்டுத் துறை இயக்குனர் முகமது அசிம் வரவேற்றார்.
புதுச்சேரி பல்கலைக்கழக விளையாட்டு துறை இணை இயக்குனர் (பொ) ராம் மோகன் சிங் வாழ்த்தி பேசினார். இப்போட்டியில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சார்ந்த 24 கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், தேர்வு பெறும் மாணவிகள் பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெறும் இறகு பந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
