/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா
/
இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா
ADDED : அக் 21, 2024 06:11 AM

புதுச்சேரி: இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, உழவர்கரை டான் பேட்மின்டன் அகாடமியில் நடந்தது.
புதுச்சேரி ரோட்டரி எலைட்ஸ், மற்றும் பிரன்ச் பெதர் லீக் (எப்.எப்.எல்) இணைந்து, 2 நாள் இறகு பந்து போட்டியை புதுச்சேரி மேரி உழவர்க்கரையில் உள்ள டான் பேட்மின்டன் அகாடமியில் நடத்தின. இதில், புதுச்சேரி, மற்றும் தமிழகத்தில் இருந்து 11 முதல் 17 வயது வரை 400 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில், ரோட்டரி தலைவர் சந்திரசேகர், கோபி, ஆனந்தன், உறுப்பினர்கள் ஜெயக்குமார், லாரன்ஸ், கோவிந்தராஜன் அருள்ராஜ், சரவணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கோப்பை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினர்.

