/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறகு பந்து போட்டி: டி ஷர்ட் அறிமுக விழா
/
இறகு பந்து போட்டி: டி ஷர்ட் அறிமுக விழா
ADDED : அக் 17, 2024 12:27 AM

புதுச்சேரி : இறகுப்பந்து போட்டிக்கு டிஷர்ட் அறிமுக விழா நேற்று நடந்தது.
ரோட்டரி எலைட்ஸ், மற்றும் பிரன்ச் பாதர் லக் (எம்.எப்.எல்) ஆகியன இணைந்து, இறகு பந்து போட்டி புதுச்சேரி மேரி உழவர்க்கரையில் உள்ள டான் பேட்மின்டன் அகாடமியில் நடத்துகிறது. போட்டிக்கான டி ஷர்ட் அறிமுக விழா அண்ணாமலை ஓட்டலில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ரோட்டாரி எலைட் தலைவர் சந்திரசேகரன், எம்.எப்.எல்., நிர்வாகி சத்தியநாராயணன், நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
வரும் 19, மற்றும் 20ம் தேதி நடைபெறும் இப்போட்டியில் புதுச்சேரி, மற்றும் தமிழகத்தில் இருந்து 11 முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் விவரங்களுக்கு 9787351232 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

