UPDATED : நவ 12, 2026 12:02 AM
ADDED : நவ 12, 2026 12:00 AM
புதுச்சேரி: பண மோசடி வழக்கில் 2 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 43; தொழிலதிபர். இவரது நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த முகமது ரபிக், 42, என்பவர் அறிமுகமானர்.
இவர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக வெங்கடேஷிடம் ஆசை வார்த்தை கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தார். இதுகுறித்து புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டு, சென்னையை சேர்ந்த முகமது ரபீக் உட்பட 12 பேரை கைது செய்தனர்.
ராஜேஸ்வரி என்பவர் தலைமறைவாக உள்ளார். இதனிடையே சிறையில் உள்ள கைலாஷின் ஜாமின் மனு, ராஜேஸ்வரி முன்ஜாமின் மனுவினை புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து, உத்தரவிட்டார். இதையடுத்து தலைமறைவாக உள்ள ராஜேஸ்வரியை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
