/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறந்த நெல் ஆராய்ச்சி நிலையமாக பஜன்கோ வேளாண் கல்லுாரி தேர்வு
/
சிறந்த நெல் ஆராய்ச்சி நிலையமாக பஜன்கோ வேளாண் கல்லுாரி தேர்வு
சிறந்த நெல் ஆராய்ச்சி நிலையமாக பஜன்கோ வேளாண் கல்லுாரி தேர்வு
சிறந்த நெல் ஆராய்ச்சி நிலையமாக பஜன்கோ வேளாண் கல்லுாரி தேர்வு
ADDED : மே 07, 2025 12:50 AM

புதுச்சேரி: காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அகில இந்தியாவில் சிறந்த நெல் ஆராய்ச்சி நிலையம் உட்பட 7 விருதுகளை தட்டிச்சென்றது.
இந்தாண்டிற்கான தேசிய அளவில் நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூட்டம் ஹைதராபாத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்தது.
இந்த வைர விழா கூட்டத்தில் இந்தியாவிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், நெல் ஆராய்ச்சி குறித்து பல்வேறு தொழில்நுட்ப கருத்துக்கள் ஆராயப்பட்டது. ஆய்வுகள் மேற் கொண்ட விதம், எண்ணிக்கை, துல்லிய தன்மை போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்டு, ஆண்டு தோறும் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் 14 விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு காரைக்கால் வேளாண் கல்லுாரி சிறந்த ஆராய்ச்சி நிலையத்திற்கான விருது உட்பட ஏழு விருதுகளை தட்டிச் சென்றது.
சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விருதினை துணை தலைமை இயக்குனர் (பயிர் அறிவியல்) யாதவ், இந்திய நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுந்தரம் ஆகியோரிடம் இருந்து கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ் பெற்றக்கொண்டார்.
வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு கல்லுாரி யின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை பேராசிரியர் திருமேனி தேர்வு செய்யப்பட்டார்.
விருதுகளை கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ் மற்றும் பேராசிரியர்கள், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.