/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிேஷக ஆண்டு விழா துவக்கம்
/
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிேஷக ஆண்டு விழா துவக்கம்
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிேஷக ஆண்டு விழா துவக்கம்
பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிேஷக ஆண்டு விழா துவக்கம்
ADDED : ஜன 25, 2024 05:29 AM

புதுச்சேரி, பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலின் கும்பாபிேஷகம் 11ம் ஆண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று துவங்கியது.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை, இரும்பை கிராமம் குபேரன் நகரில் அமைந்துள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலின் கும்பாபிேஷகம் 11ம் ஆண்டு விழா நேற்று துவங்கியது.
அதனையொட்டி நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமமும், மாலை வேதிகார்ச்சனை, முதல் கால மூல மந்திர ஜபம் நடந்தது.
இன்று 25ம் தேதி காலை இரண்டாம் கால மூல மந்திர ஜபம், 9:00 மணிக்கு ஏகாதச மஹன்யாஸ ருத்ராபிேஷகம், தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு மூன்றாம் கால மூல மந்திர ஜபம், மாலை 5:00 மணிக்கு மேல் அம்பாளுக்கு 64 விதமான பணிவிடை செய்தல், கன்யா பூஜை, தருணி, சுமங்கலி, சுவாசினி, பிரம்மச்சாரி, வடுக பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.
நாளை 26ம் தேதி 4ம் கால பூஜை, மூல மந்திர ஹோமம், மகா அபிேஷகம், கலசாபிேஷகம், பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு நைவேத்திய உபசாரம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு மேல் மூலவர் சிறப்பு அலங்காரம், நவசக்தி அர்ச்னை, தீபாராதனை, உற்சவர் ஆலய உட்புறப்பாடு நடக்கிறது.