ADDED : ஏப் 26, 2026 08:43 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: செட்டிப்பட்டு காளியம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு பால்குட அபிஷேகம் வரும் 1ம் தேதி நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 17ம் ஆண்டு சித்திரை பவுர்ணமி விழா மற்றும் பால்குட அபிேஷகம் வரும் 1ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, அன்று காலை 6:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று, சக்தி கரகத்துடன் 108 பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து, மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
