தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாலாஜி வித்யா பீத் உலக மகளிர் தின விழா

பாலாஜி வித்யா பீத் உலக மகளிர் தின விழா

பாலாஜி வித்யா பீத் உலக மகளிர் தின விழா


ADDED : மார் 12, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 11:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், 'நமது தற்காப்புகலை' என்ற தலைப்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

பாலாஜி வித்யா பீத் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் மகளிர் குழு சார்பில் நடந்த உலக மகளிர் தின விழாவிற்கு, பேராசிரியை உமா வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் தலைமை தாங்கினார். கவுரவ விருந்தினராக சூர்யா குழும நிறுவனத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குனர் அருண்குமார் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

பல்கலைக்கழக பொது மேலாளர் பேராசிரியர் ஆஷா சுரேஷ்பாபு, பேராசிரியர் உஷா கருணாநிதி, மகளிர் குழு தலைவர் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் மகளிர் குழு அமைப்பினர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், சிலம்ப பயிற்சியாளர் வசந்தன், மாணவிகளுக்கு சிலம்ப பயிற்சி அளித்தார்.

இதில், மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று சிலம்பம் பயிற்சி பெற்றனர். பேராசிரியர் உமா நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us