/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலாஜி வித்யாபீத் பல்கலை.,யில் 927 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
/
பாலாஜி வித்யாபீத் பல்கலை.,யில் 927 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
பாலாஜி வித்யாபீத் பல்கலை.,யில் 927 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
பாலாஜி வித்யாபீத் பல்கலை.,யில் 927 மாணவர்களுக்கு பட்டமளிப்பு
ADDED : செப் 03, 2025 02:12 AM

பாகூர்:கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலையில் பட்டமளிப்பு விழா நடந்தது.
பல்கலை வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர் மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ், பாலாஜி வித்யாபீத்தின் சிறந்த கற்பித்தல், கற்றல் வளங்கள் குறித்தும் பேசி, 39 மாணவர்களுக்கு கல்வி சிறப்புக்கானபதக்கங்களை வழங்கினார்.
இரண்டாம் நாள் நிகழ்வில், தலைமை விருந்தினராக,புதுச்சேரி வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம்மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு மன்ற இயக்குநர் மஞ்சு ரஹி, 36 மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.
விழாவில், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 430 பட்டதாரிகள், இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லுாரியை சேர்ந்த 99 பட்டதாரிகள், துணை மருத்துவ பிரிவை சேர்ந்த 16 பட்டதாரிகள் , 15 முனைவர் பட்ட அறிஞர்கள், 3 முதுகலை அறிஞர்கள், நர்சிங் அறிவியல், மருந்தகம், பிசியோதெரபி, இசை மற்றும் யோகா சிகிச்சை உள்ளிட்ட சுகாதார அறிவியல் மையத்தை சேர்ந்த 382 பட்டதாரிகள் என, மொத்தம் 927 பேருக்கு,பல்கலை வேந்தர் ராஜகோபாலன் பட்டங்கள் வழங்கினார்.
மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன சிறுநீரகவியல் துறைத் தலைவர் ஜோசப் பிலிப்ராஜ் முதன்மைத் தலைவராக பங்கேற்றார்.துணைவேந்தர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ், பட்டமளிப்பு அறிக்கை வாசித்தார்.
கல்வியாளர்களின் டீன் அசோக்குமார் தாஸ் பட்டதாரிகளுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
பதிவாளர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.