/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலசேவிகா ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
/
பாலசேவிகா ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
ADDED : நவ 10, 2024 05:04 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பாலசேவிகா ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, நாளை மறுநாள் துவங்கி, இரு நாட்களுக்கு நடக்கிறது.
புதுச்சேரி அரசு பள்ளி களில் பணியாற்றும் பாலசேவிகா ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு, நாளை மறுதினம் 12ம் தேதி துவங்குகிறது.
இதில், புதுச்சேரி - 141; காரைக்கால் - 2; மாகி - 17; ஏனாம் - 26, என மொத்தம், 186 பேர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்.
காரைக்கால், மாகி, ஏனாமை சேர்ந்தவர்களுக்கு நாளை மறுதினம் காலையிலும், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மதியமும் கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வு வரும், 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
புதுச்சேரியில் பணிபுரிபவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை வளாக கருத்தரங்க கூடத்திலும், காரைக்காலில் பணிபுரிபவர்களுக்கு, காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலவலகத்திலும் கலந்தாய்வு நடக்க உள்ளது.
மாகியில் பணியாற்றுபவர்களுக்கு, அதே பகுதியில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலும், ஏனாமில் பணியாற்றுபவர்களுக்கு, அதேபகுதி கல்வித்துறை அதிகாரி அலுவலகத்திலும் கலந்தாய்வு நடக்கிறது.