தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை; போலீசார் உத்தரவு 

 காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை; போலீசார் உத்தரவு 

 காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை; போலீசார் உத்தரவு 


ADDED : ஏப் 24, 2026 10:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 10:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விருதுநகர், திருச்சூர் பட்டாசு விபத்து எதிரொலி மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை பட்டாசு தயாரிக்கக் கூடாது என, போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

விருதுநகர் பட்டாசு தயாரிக்கும் கூடம் மற்றும் திருச்சூரில் பட்டாசு விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக, புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்கப்படும் கூடங்களில் ஆய்வு செய்ய போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டது.

அதன்படி, திருக்கனுார், கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, சுத்துக்கேணி கிராமங்களில் இயங்கி வரும் நாட்டு பட்டாசு தயாரிக்கும் கூடங்களில் திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என, சோதனை செய்து, கூடத்திற்கான உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டனர்.

பட்டாசு செய்யும் இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தற்போது, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பட்டாசு விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகையால், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்த கூடாது என, உத்தரவிட்டனர்.

மேலும், பட்டாசுகளை மொத்தமாக வாங்கும் நபர்களின் விவரங்கள், அடையாள அட்டைகளை பெற்று சேகரித்து வைக்க வேண்டும். இதனை மீறினால் பட்டாசு தயாரிப்பு கூடத்திற்கான உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us