/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஞ்சு மிட்டாய் விற்க புதுச்சேரியில் தடை
/
பஞ்சு மிட்டாய் விற்க புதுச்சேரியில் தடை
ADDED : பிப் 10, 2024 01:31 AM
புதுச்சேரி:புதுச்சேரியில், இரண்டு நாட்களுக்கு முன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்க கூடிய, 'ரோடமின்-பி' என்ற, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் விஷ நிறமி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் விற்ற பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில், பஞ்சு மிட்டாய் விற்பனையை தடை செய்து, கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு;
புதுச்சேரியில் குழந்தைகள் வாங்கி உண்ணும் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ததில், அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் 'ரோடமின்- -- பி' என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெற்று, விற்பனை செய்ய வேண்டும். தரச்சான்று பெறாதவர்கள், உடனடியாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுகி தரச்சான்று பெற்று, பஞ்சு மிட்டாய் விற்பனையைத் துவங்கலாம்.
அதுவரை பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.