தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எழுச்சி இந்தியா திட்டத்தில் வங்கி கடன்: கவர்னர் தகவல்

எழுச்சி இந்தியா திட்டத்தில் வங்கி கடன்: கவர்னர் தகவல்

எழுச்சி இந்தியா திட்டத்தில் வங்கி கடன்: கவர்னர் தகவல்


ADDED : அக் 24, 2024 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 06:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆதிதிராவிடர் வணிக தொழில் வளர்ச்சிக் கூட்டமைப்பின் சார்பில், புதுச்சேரி எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பொருளாதார விடுதலை மாநாடு அண்ணாமலை இன்டர்நேஷனல் ஓட்டலில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டார். இதில் கூட்டமைப்பின் அகில இந்திய நிறுவனர் தமிழரசன், புதுச்சேரி மாநில தலைவர் பன்னீர்செல்வம்,மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொழில்முனைவோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:

சமுதாயத்தில் ஒட்டு மொத்த வளர்ச்சியே உண்மையான,முழுமையான வளர்ச்சி எனும்அடிப்படையில் தான் மத்திய, மாநில அரசுகள் பயணித்துக் கொண்டு இருக்கின்றன.

எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதற்காகவே, 'தேசிய அட்டவணை மற்றும் பழங்குடி இனத்தவர் தொழில் மையத் திட்டம்' இருக்கிறது.

இதன்மூலம், தொழில் நுட்ப உதவி முதல் வியாபார வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது வரை அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. எழுச்சி இந்தியா திட்டத்தின் மூலம், ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வங்கி கடன் பெற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us