/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாங்க் ஆப் பரோடா வங்கி உழவர் இருவார விழா
/
பாங்க் ஆப் பரோடா வங்கி உழவர் இருவார விழா
ADDED : நவ 18, 2024 06:26 AM

புதுச்சேரி : பாங்க் ஆப் பரோடா வங்கியின் உழவர் இருவார விழா தஞ்சாவூரில் நடந்தது.
இந்தியாவின் முன்னோடி வங்கியான பாங்க் ஆப் பரோடா நகரங்கள் மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் தனது சேவையை செய்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக பரோடா வங்கி மூலம் நாடு முழுதும் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ஆண்டுதோறும் உழவர் இருவார விழா நடத்தப்படுகிறது. அதன்படி, 7வது ஆண்டாக பரோடா உழவர் இருவார விழா தஞ்சாவூரில் நடந்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல மேலாளர் சரவணக்குமார், வங்கியின் கடன் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
தஞ்சாவூர் என்.ஐ.எப்.டி.இ.எம். பதிவாளர் சண்முகசுந்தரம், வேளாண் துறை இணை இயக்குனர் வித்யா மோகன், பாரத கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் புனிதா கணேசன் ஆகியோர் பேசினர்.
விழாவில், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு ரூ. 8 கோடியே 45 லட்சம் மதிப்பிலான கடனுதவி கடிதங்கள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காய்கறிகளின் விதைகளின் தொகுப்பு வழங்கப்பட்டது.
தஞ்சை கிளை முதன்மை மேலாளர் ரவிச்சந்திரன் வாழ்த்தி பேசினார். புதுச்சேரி பிராந்திய தலைவர் ரவி நன்றி கூறினார்.