ADDED : செப் 16, 2026 11:43 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மாநில அளவிலான வங்கியாளர் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
புதுச்சேரி வங்கியாளர் கூட்டமைப்பு சார்பில், ஜூன் மாத காலாண்டுக்கான கூட்டம் ஓட்டல் சன்வே நடந்தது.
கூட்டத்தில் செல்வகணபதி எம்.பி., நிதி சேவைகள் துறை இணை செயலர் ஆஷிஷ் மாதுர மோரை, நிதி செயலர் கிருஷ்ணமோகன் உப்பு, தொழில்துறை செயலர் விக்ராந்த் ராஜா, இந்திய ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் யாரசி ஜெயக்குமார், பொதுமேலாளர் கிருஷ்ணராஜ், இந்தியன் வங்கி செயல் இயக்குனர் மினி, பொது மேலாளர்கள் சந்திரசேகரன், பத்மாவதி ஸ்ரீகாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாநிலத்தில் வங்கிகளின் செயல்பாடு, அரசு நிதியுதவி திட்டங்களில் வங்கிகளின் செயல்பாடுகள், புதுச்சேரியில் நிதிசார் கல்வி மையங்களின் செயல்பாடுகள் போன்றவை ஆலோசிக்கப்பட்டன.
