/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வங்கியாளர்கள் குழும சிறப்பு முகாம் பயனாளிகளுக்கு காப்பீடு வழங்கல்
/
வங்கியாளர்கள் குழும சிறப்பு முகாம் பயனாளிகளுக்கு காப்பீடு வழங்கல்
வங்கியாளர்கள் குழும சிறப்பு முகாம் பயனாளிகளுக்கு காப்பீடு வழங்கல்
வங்கியாளர்கள் குழும சிறப்பு முகாம் பயனாளிகளுக்கு காப்பீடு வழங்கல்
ADDED : ஆக 06, 2025 08:08 AM

புதுச்சேரி,: மாநில அளவிலான வங்கியா ளர்கள் குழுமம் சார்பில், நடந்த சிறப்பு முகாமில், பயனாளிகளுக்க விபத்து காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.
இந்திய அரசு நிதி சேவைகள் துறை சார்பில், ஊரக நிலைகளில் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலா ன வங்கியாளர்கள் குழுமம் சார்பில், வில்லியனுார் தனியார் மஹாலில், சிறப்பு முகாம் நடந்த து.
நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர் கேசவன் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் ராஜ்குமார், இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் ஷிவ் பஜ்ரங் சிங் முன்னிலை வகித்தனர். பொது மேலாளர் சந்திரசேகரன், கள பொது மேலாளர் பத்மாவதி, சப் கலெக்டர் குமரன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமில், பிரதமர் ஜன்தன் யோஜனா, பீமா யோஜனா, அட்டல் பென்ஷன் யோஜனா போன்ற முக்கிய நிதி நல திட்டங்கள் மற்றும் விபத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, விபத்து காப்பீட்டு தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. கணக்குகளுக்கான வாரிசு நியமனம், உரிமை கோரா வைப்புத் தொகைகள், டிஜிட்டல் மோசடிகள் குறித்தும், புகார் மற்றும் தீர்வு முறைகள் பற்றி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.