/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீண்டும் துளிரும் பேனர் கலாசாரம்; கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
/
மீண்டும் துளிரும் பேனர் கலாசாரம்; கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
மீண்டும் துளிரும் பேனர் கலாசாரம்; கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
மீண்டும் துளிரும் பேனர் கலாசாரம்; கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
ADDED : ஜன 29, 2025 05:17 AM
புதுச்சேரி : புதுச்சேரி நுாறடிச் சாலையில் திருமணம் முடிந்து 3 நாட்கள் கழித்தும்பேனர்களை அகற்றாத கல்யாண கோஷ்டிகள் மற்றும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் அதிகரித்த பேனர் கலாசாரத்தால் வாகன ஓட்டிகள், பாத சாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என நீதிமன்றம் எச்சரித்த பின்பே, புதுச்சேரியில் பேனர் கலாசாரம் சற்று ஓய்ந்து உள்ளது.
இதனை சீர்குலைக்கும் வகையில், திருமண கோஷ்டிகள் மீண்டும் பேனர் கலாசாரத்தை துவக்கி உள்ளனர். தங்கள் வீட்டு திருமணத்திற்கு வரும் அரசியல் கட்சி பிரமுகர்களை வரவேற்று, சென்டர் மீடியன்களில் வரிசையாக பேனர் வைக்க துவங்கி விட்டனர்.
இதற்காக சென்டர் மீடியன் நடு பகுதியை குதறி போட்டு, கட்சி கொடிகளையும் கட்டுகின்றனர். இதனால் சென்டர் மீடியனில் உள்ள மின் விளக்குகளுக்கான மின் இணைப்புகளை துண்டித்து விடுகின்றனர். மின் விளக்கு எரியாததால் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.மின் இணைப்புகளை சரிசெய்ய மின் துறை தனி டெண்டர் விட்டு பல ஆயிரம் செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது.
புதுச்சேரியில் பேனர் வைப்பது சட்டப்படி குற்றம். அதனையும் மீறி சென்டர் மீடியன்களை குதறி வைக்கும் பேனர்களை போலீசார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக அகற்றி, பேனர் வைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் புதுச்சேரி நுாறடிச்சாலை ராஜிவ் சிக்னலில் இருந்து இந்திரா சிக்னல், மறைமலையடிகள் சாலைசென்டர் மீடியன்களில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்த திருமணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்று வரிசையாக பேனர் வைத்திருந்தனர்.
திருமணம் முடிந்து 3 நாட்கள் கடந்தும் இதுவரை பேனர் அகற்றவில்லை.
பேனர் வைத்துள்ள சாலை வழியாக தான் பொதுப்பணித்துறை அமைச்சர், துறை செயலர், கலெக்டர், தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் என அனைவரும் செல்கின்றனர். சென்டர் மீடியனில் வரிசையாக வைத்துள்ள பேனர்இவர்களின் கண்ணில் இதுவரை தென்படவில்லையா.
பேனர் வைத்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மதிக்காமல் பேனர் வைப்போர் மீது அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படுவது வேடிக்கையாக உள்ளது.
இதுபோன்று நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைக்கும் கல்யாண கோஷ்டிகள் மீதும், பேனர் பொருத்தும்தனியார் நிறுவனம் மீதும், பேனர் வைப்பதை கண்டுகொள்ளாமல் செல்லும் அதிகாரிகள் மீதும் நீதிமன்றம் கோர்ட் அவமதிப்பு வழக்கு பதிவு செய்துகடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.