ADDED : ஆக 02, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்,: பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஜெயராஜ், நேற்று முன்தினம் தவளக்குப்பம் சாலையில் ஆய்வு மேற் கொண்டார்.
கடலுார் சாலை, பூரணாங்குப்பம் முதல் தவளக்குப்பம் சந்திப்பு வரை அனுமதி பெறாமல் அரசியல் பேனர்கள், திருமண பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, உதவிப் பொறியாளர் கொடுத்த புகாரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார்.