/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பத்தில் பேனர் அகற்றம்
/
அரியாங்குப்பத்தில் பேனர் அகற்றம்
ADDED : மார் 17, 2026 04:17 AM
அரியாங்குப்பம்: புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, பொது இடத்தில் உள்ள பேனர்கள், போஸ்டர்கள், கட் அவுட், விளம்பரங்களை உடனடியாக அகற்ற, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதனை தொடர்ந்து, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் விநாயகமூர்த்தி முன்னிலையில், ஊழியர்கள் அரியாங்குப்பம் பகுதிகளில் இருந்த பேனர்களை அகற்றினர்.
அதே போல், முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட முதலியார்பேட்டை, மரப்பாலம் சந்திப்பு, நைனார்மண்டபம், முருங்கப்பாக்கம் சாலையில் இருந்த பேனர்கள், சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர்.

