/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு
/
அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு
ADDED : மார் 17, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அனுமதியின்றி பேனர் வைத்த, அடையாளம் தெரியாதவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி நடந்த மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, முத்தியால்பேட்டை எஸ்.வி.பட்டேல் சாலை, காந்தி வீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக, நடைப்பாதையை ஆக்கிரமித்து வரவேற்பு பேனர், கொடி கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன.
தேசிய நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் சீனிவாசன்,கொடுத்த புகாரின் பேரில் பேனர் வைத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.