/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரும்பார்த்தபுரம் மேம்பாலம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பேரிகார்டு அமைப்பு
/
அரும்பார்த்தபுரம் மேம்பாலம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பேரிகார்டு அமைப்பு
அரும்பார்த்தபுரம் மேம்பாலம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பேரிகார்டு அமைப்பு
அரும்பார்த்தபுரம் மேம்பாலம் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பேரிகார்டு அமைப்பு
ADDED : மார் 18, 2025 04:40 AM

வில்லியனுார்: தினமலர் செய்தி எதிரொலியால் அரும்பார்த்தபுரம் மேம்பாலம், புதிய பைபாஸ் சர்வீஸ் சாலை மற்றும் வி.மணெவெளி சாலையில் போக்குவரத்து போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர்.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அரும்பார்த்தபுரம் முதல் இந்திராகாந்தி சிக்னல் வரையில் வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலையை விரிவாக்கம் செய்யாததால், மூலக்குளம் மூதல் இந்திரா சிக்னல் வரை கடும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்தது.
இதற்கு தீர்வாக, அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் துவங்கி ரெட்டியார்பாளையம் ஜான்பால் நகர் வழியாக நுாறடிச்சாலை ரயில்வே மேம்பாலம் வரை 4.5 கி.மீ., துாரத்திற்கு புதிய பைபாஸ் சாலை அமைத்தனர்.
புதிய பைபாஸ் சாலையில் கனரக வாகனங்களை செல்லுவது மட்டுமே தெரியும். மற்ற வாகனங்கள் சாலையில் செல்லுவதே தெரியாதை வகையில் உயரமான சென்டர் மீடியன் அமைத்துள்ளனர். இந்த சாலையில் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை.
90 சதவீத பணிகள் மட்டுமே முடிந்த நிலையில் முறைப்படி பைபாஸ் சாலை திறக்கவில்லை. இதனால் மூலக்குளம் மூலம் இந்திரா சிக்னல் வரை ஏற்படும் டிராபிக்கில், சிக்கி கொள்வதை தவிர்க்க ஏராளமான வாகனங்கள் அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
விசாலமான சாலையால் வாகனங்கள் விரைவாக நுாறடிச்சாலையை அடைந்து விடுகின்றனர். அரும்பார்த்தபுரம் ரயிவே மேம்பாலம் சர்வீஸ் சாலை வழியாக புதிய பைபாஸ் சாலையை பிடித்து புதுச்சேரிக்கு செல்கின்றனர்.
இதனால், சர்வீஸ் சாலை, பைபாஸ் மற்றும் வி.மணவெளி என நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், தினமும் வாகன விபத்துக்கள் நடந்து வந்தது. தேசிய நெடுஞ்சாலை துறையினர் வி.மணவெளி ரோடு, மேம்பால சர்வீஸ் சாலை பைபாஸ் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, தினமலர் நாளிதழில நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது.
அதையடுத்து போக்குவரத்து போலீசார் பைபாசில் புதுச்சேரி பகுதியில் இருந்து அதிவேகமாக வரும் வாகனங்கல் மெதுவாக செல்லும் வகையில் பேரிகார்டு வைத்தனர்.