/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அடிப்படை வசதிகள் 'ஜோர்'
/
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அடிப்படை வசதிகள் 'ஜோர்'
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அடிப்படை வசதிகள் 'ஜோர்'
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அடிப்படை வசதிகள் 'ஜோர்'
ADDED : டிச 31, 2024 05:51 AM

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை புதுச்சேரி நகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறியதாவது: சுற்றுலா பயணிகள் குவியும் கடற்கரை சாலையில் ஏழு இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர குருசுக்குப்பம், பழைய சாராய ஆலை, டுப்ளக்ஸ் சிலை, மேரி கட்டடம் என பல்வேறு இடங்களில் புதுச்சேரி நகராட்சி சார்பில் கழிப்பிட வசதிகள் ஏற்பட்டுள்ளன. நடமாடும் கழிப்பறைகளும் தேவையான இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று 30 ம்தேதி, நாளை 1ம் தேதி இந்த கழிப்பிடங்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். 24 மணி நேரமும் கழிப்பறைகள் துாய்மை செய்யப்படும்.
இது தவிர கடற்கரை சாலையில் 36 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பைகள் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பிறகு நிரந்தரமாகவே அதே இடங்களில் வைக்கப்படும். கடற்கரை சாலை பத்து இடங்களாக பிரித்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பிலும் 6 நகராட்சி ஊழியர்கள் துாய்மை பணிக்காக களத்தில் இருப்பர். இவர்கள் உடனுக்குடன் துாய்மை பணியில் ஈடுபடுவர்,
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், நகரினை துாய்மையாக வைத்து கொள்ள சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.