sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனைத்து ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு

 அனைத்து ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு

 அனைத்து ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு


ADDED : ஏப் 05, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 06:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுதலின்படி, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான ஓட்டுப் பதிவு வரும் 9ம் தேதி நடக்கிறது. ஓட்டுப் பதிவு நாளன்று, வாக்காளர்கள் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி தங்களின் ஓட்டுகளை பதிவு செய்ய, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் சுத்தமான குடிநீர் வசதி, மருத்துவ உதவி உபகரணங்கள், தற்காலிக பந்தல்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தடையின்றி ஓட்டுச்சாவடிக்கு செல்ல சாய்வுதள வசதி.

ஓட்டுச்சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மின்விளக்கு வசதிகள், தண்ணீர் வசதியுடன் கூடிய தனித்தனி ஆண், பெண் கழிவறைகள், தேவைப்படுபவர்களுக்கு சக்கர நாற்காலிகள், தன்னார்வலர்களின் உதவி மற்றும் ஓட்டுச்சாவடிகளில் முதியோர்கள். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க நேரடி முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

வரும் 9ம் தேதி ஓட்டுப்பதிவு நாளன்று அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஓட்டு சாவடிகளுக்கு சென்று தங்களின் ஓட்டுகளை தவறாமல் பதிவு செய்து, புதுச்சேரியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு அடைவதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us