/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கரசூர் அரசு பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு போட்டி
/
கரசூர் அரசு பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு போட்டி
ADDED : ஆக 20, 2025 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் அருகே உள்ள கரசூர் அரசு துவக்கப்பள்ளியில், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவிற்கான போட்டியில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டன.
பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, தலைமை ஆசிரியர் புஷ்பா ஆரோக்கியமேரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளித் துணை ஆய்வாளர் வட்டம் - 5 புவியரசன், எழுத்தறிவிலும், எண்ணறிவிலும் மாணவர்கள் சிறந்து விளக்க வேண்டும் என, பேசினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி, பாராட்டினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.