/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பத்துக்கண்ணு-ஊசுடேரி சர்ப்லஸ் வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்
/
பத்துக்கண்ணு-ஊசுடேரி சர்ப்லஸ் வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்
பத்துக்கண்ணு-ஊசுடேரி சர்ப்லஸ் வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்
பத்துக்கண்ணு-ஊசுடேரி சர்ப்லஸ் வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்
ADDED : நவ 11, 2024 07:21 AM

வில்லியனுார், : பத்துக்கண்ணில் இருந்து சங்கராபரணி ஆற்றுக்கு செல்லும் ஊசுடேரி சர்ப்லஸ் வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தின் பெரிய ஏரியாக உள்ளது ஊசுடேரி. இந்த ஏரியில் முழு கொள்ளவான 3.5 மீட்டர் உயரமாகும். இவ்வாண்டு மழை குறைந்துள்ளதால், தற்போது ஏரியில் 1.38 மீட்டர் அளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. மழை இல்லாததால் சுத்துக்கேணி அணை நிரம்பாமல் உள்ளது.
வரும் நாட்களில் கன மழை இருந்தால் மட்டுமே ஊசுடேரி நிரம்பும். இல்லை எனில் வீடுர் அணை நிரம்பி, அணை திறக்கப்பட்டு சங்கராபரணி ஆறு வழியாக வரும் நீர் சுத்துக்கேணி படுக்கை அணையில் நிரம்பி, அங்கிருந்து வாய்க்கால் வழியாக ஊசுடேரிக்கு தண்ணீர் வந்தால் மட்டுமே இவ்வாண்டு ஊசுடேரி முழு கொள்ளளவை எட்டும்.
ஊசுடேரி முழு கொள்ளவு நிரம்பியவுடன் ஏரிக்கு வரும் நீர் அளவை சமநிலை படுத்தும் வகையில் பத்துக்கண்ணு பகுதியில் இருந்து சங்கராபரணி ஆறுக்கு தண்ணீர் திருப்பிவிடும் சர்ப்லஸ் வாய்க்கால் உள்ளது.
பத்துக்கண்ணில் இருந்து சுமார் 3 கி.மீ துாரம் கொண்ட இந்த வாய்க்கால் தற்போது செடி கொடிகள் வளர்ந்து காடுபோன்று மாறிவிட்டது.
பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் உதவி பொறியாளர் லுாயிபிரகாசம், இளநிலைப் பொறியாளர் பாரதி முன்னிலையில் சர்ப்லஸ் வாய்க்கால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துார்வாரும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு பொக்லைன் மூலம் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.