/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவிலில் வரும் 1ம் தேதி பவித்ர உற்சவம்
/
மணக்குள விநாயகர் கோவிலில் வரும் 1ம் தேதி பவித்ர உற்சவம்
மணக்குள விநாயகர் கோவிலில் வரும் 1ம் தேதி பவித்ர உற்சவம்
மணக்குள விநாயகர் கோவிலில் வரும் 1ம் தேதி பவித்ர உற்சவம்
ADDED : செப் 27, 2024 05:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் வரும் 1ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவிலில், திருப்பவித்ர உற்சவம் வரும் அக்.,1ம் தேதி துவங் குகிறது.
வரும், 2ம் தேதி, மண்ட லேஸ்வரர் பிரதிஷ்டையுடன் கூடிய யாக ஆரம்பமும், பவித்ர அதிவாசன பூஜையும் நடக்கிறது.
அடுத்தடுத்த தினங் களில், யாக பூஜைகளும், பவித்ர சமர்ப்பணையும் நடக்கின்றன.
வரும், 6ம் தேதி காலை 10:00 மணிக்கு, பவித்ர சமர்ப்பணை விசேஷ யாகம், பூர்ணாஹூதி கலாசபிேஷகமும் மாலை 7:00 மணிக்கு, பிரணவ மூர்த்திக்கு பஞ்ச முக அர்ச்சனையுடன் தீபாராதனையும், தங்க ரத உள் புறப்பாடும் நடக்கிறது.
மேலும், வரும், 7,ம் தேதி காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 11:00 மணிக்கு அபிேஷகம், தீபாராதனை மற்றும் மாலை 4:30 மணிக்கு, அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதி உற்சவமும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.

