ADDED : மே 03, 2025 04:53 AM

புதுச்சேரி : தொழிலாளர் தினத்தையொட்டி புதுச்சேரி மாநில தி.மு.க., தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் பி.ஆர்.டி.சி., பணிமனை, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஆட்டோ மற்றும் டெம்போ நலச்சங்கம் பகுதிகளில் தொ.மு.ச., கொடி ஏற்றுதல் மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொ.மு.ச., பேரவைத் தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அங்காளன், ராமகிருஷ்ணன், சிவக்குமார், மிஷேல், காயாரோகணம், காந்தி, துரை, பக்தவச்சலம், சீனுவாசன், அண்ணாதுரை, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று கொண்டு, தொ.மு.ச., கொடியேற்றி, ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

