ADDED : ஏப் 27, 2026 09:54 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பாரத் தேக்வோண்டோ சங்கம் சார்பில், தேக்வாண்டோ வீரர்களுக்கு பெல்ட் தேர்வு நடந்தது.
புதுச்சேரி, பாரத் தேக்வோண்டோ சங்கம் மாஸ்டர் வினோத் முன்னிலையில் பெல்ட் தேர்வு இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பா.ஜ., மாநில துணைத் தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டு, வீரர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கினார். மேலாளர் ரவிகுமார், சமுக ஆர்வலர் கார்த்திகேயன், பயிற்சியாளர்கள் செல்லம், ஷாலினி, சோமசுந்தரம், அஸ்வினி, காமேஷ்வரன், நித்திஷ்குமார், தங்கபாண்டியன், பிரவீன் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
