ADDED : ஆக 04, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : டி.என்.பாளையத்தில் இலவச மனைபட்டா பெற்ற பயனாளிகள் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மணவெளி தொகுதி தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையத்தில் வீடு இல்லாத 236 பயனாளிகள ுக்கு இலவச மனைபட்டா அரசு சார்பில், சமீபத்தில் வழங்கப்பட்டது. இதையடுத்து, மனைப்பட்டா பெற்றபயனாளிகள் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து மனை பட்டா பெற்ற பயனாளகள் வீடு கட்டுவதற்கு மானிய தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். பா.ஜ., தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் உள்ளிட்ட டி.என்.பாளையம் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.