/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லறை தினத்தையொட்டி குவிந்த பெங்களூரு பூக்கள்
/
கல்லறை தினத்தையொட்டி குவிந்த பெங்களூரு பூக்கள்
ADDED : நவ 02, 2024 06:15 AM

புதுச்சேரி: ல்லறை தினத்தையொட்டி புதுச்சேரி வீதிகளில் பெங்களூரு பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தது.
கிறிஸ்துவர்கள், தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்த ஆண்டு தோறும் நவம்பர் 2ம் தேதி, கல்லறை தினமாக அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம், முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை சுத்தம் செய்து, பூ மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி, குடும்பத்தினருடன் கல்லறைக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.
கிறிஸ்துவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை செய்யப்படும். கல்லறை திருநாளையொட்டி பல்வேறு இடங்களில் பூக்கள் விற்பனை ஜோராக இருந்தது. பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட விதவிதமான பூக்கள் சம்பா கோவில் என அழைக்கப்படும் மிஷன் வீதி ஜென்மராகினி மாதா ஆலயம் எதிரில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.
இேதபோல் பெரிய மார்க்கெட், அரியாங்குப்பம், பட்டேல் சாலை உள்ளிட்ட இடங்களிலும் பூக்கள் விற்பனை நடந்தது. பெங்களூரு ஸ்பெஷல் ரோஸ், வெள்ளை நிற கல்லறை பூக்கள், புளு டெஸ்சி, ஆஸ்ட்ரெஸ் ஒரு கட்டு ரூ. 60 முதல் ரூ. 100 வரைக்கும், ரோஜா, சாமந்தி, சம்பங்கி ஆகியவை கிலோ ரூ. 160 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்டது.