தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் சாதனை

பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் சாதனை

பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் சாதனை


ADDED : மார் 02, 2024 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மலேசியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

மலேசியாவில் காமன்வெல்த் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் புதுச்சேரி மூலக்குளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் ராகுல் ராமகிருஷ்ணன் செஸ் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

அவருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட், சபாநாயகர் செல்வம், சிவசங்கரன் எம்.எல்.ஏ., ஆகியோர் மாணவருக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, பதக்கங்கள் வழங்கி வாழ்த்தினர்.

தொடர்ந்து பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் மாணவனுக்கு பிரைட் ஆப் பெட்டிட் பொறித்த டிஷர்ட் வழங்கி கவுரவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us