/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்திசெமினார் பள்ளி சாதனை மாணவர் கவுரவிப்பு
/
பெத்திசெமினார் பள்ளி சாதனை மாணவர் கவுரவிப்பு
ADDED : அக் 05, 2024 04:00 AM

புதுச்சேரி : பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பண்டைய ஆண்டுகளின் பெயர்களை மனப்பாடம் செய்து சாதனை படைத்த யு.கே.ஜி., மாணவர் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.
புதுச்சேரி மூலக்குளம், பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பயிலும், யு.கே.ஜி., மாணவர் அன்வித். இவர், 60 பண்டைய தமிழ் ஆண்டுகளின் பெயர்களை சமஸ்கிருதத்தில், 23 வினாடிகளில் உச்சரித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க முயற்சித்து வருகிறார்.
அவரது செயலை பாராட்டி, அவருக்கு பள்ளி சார்பில், பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். அரசு கொறடா ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் ஆகியோர் மாணவரை பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தனர்.
விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.