/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சாதனை நிகழ்வு
/
பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சாதனை நிகழ்வு
பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சாதனை நிகழ்வு
பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சாதனை நிகழ்வு
ADDED : ஜூலை 27, 2025 07:35 AM

புதுச்சேரி : புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், அப்துல் கலாமின், பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சாதனை நிகழ்வு நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் அருட்தந்தை பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் லட்சுமிநாராயணன்,தனிப்பட்ட வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் சாதனையாளர் புத்தகத்தின் நிறுவனப் பயிற்சியாளர் பார்க்கவி முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், நினைவாக, 1,000 மாணவர்கள் ஒன்று கூடி, ஒரே வண்ணத்தில் வரையப்பட்ட கோடுகளைப் பயன்படுத்தி, அவரின் உருவப்படத்தை உருவாக்கி, சாதனையாளர்களின் புத்தகம் மற்றும் சர்வதேச சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்துள்ளனர்.
இதேபோல், பள்ளியின் 7ம் வகுப்பு மாணவர் சாய் பிரணவ் ஜூலை 2019 - 2025 வரை 75 உலக சாதனைகளை நிகழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இவர், அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 15 உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். புதுச்சேரி மாநிலத்திலேயே முதல்முறையாக சிறு வயதில் இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரை பள்ளி முதல்வர், சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி, கவுரவித்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.