ADDED : பிப் 21, 2024 06:49 AM

புதுச்சேரி : புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி - கடலுார் உயர் மறை மாவட்ட ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட், கலெக்டர் கேசவன், பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி பங்கேற்று பேசினர்.
புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, பொருளாளர் பிலோமின்தாஸ், அருட்தந்தை பீட்டர் ராஜேந்திரம், பங்கு தந்தை ஜோசப் பால் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், வேளாண்மை முக்கியத்துவம், பல்வேறு நாடுகளின் கலாசாரம், வேற்று கிரகத்தில் மனிதர்களின் வாழ்க்கை, மரங்களின் இன்றியமையாமை, இயற்கையைப் பாதுகாத்தல், உலக அமைதிக்கான உன்னத வழி, மனித சமுதாயத்தின் வேறுபட்ட பரிமாணங்கள் போன்ற கருத்துகளை வலியுறுத்தி பல்வேறு நடனங்கள், பாடல்கள், நாடகங்கள் மூலம் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சிறந்த மாணவர்கள், நுாறு சதவீத வருகை தந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
