/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி
/
பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி
பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி
பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி
ADDED : ஜன 25, 2025 05:30 AM

புதுச்சேரி : பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியை முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் மேற்கொண்டனர்.
புதுச்சேரி, பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி யு.கே.ஜி., மாணவர்கள் சர்வதேச சாதனை புத்தகத்தில் தடம் பதிப்பதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார்.
இதில் யு.கே.ஜி., வகுப்பில் படிக்கும் மாணவர்களான சாகித்யன், 1 முதல் 500 வரையிலான பகா எண்களை 1 நிமிடம் 26 வினாடிகள், 89 மில்லி வினாடிகளில் விரைவாக கூறினார்.
சாம் அபிேஷக், 1 முதல் 500 வரையிலான, 5ன் மடங்கு எண்களை 1 நிமிடம், 5 வினாடிகள், 16 மில்லி வினாடிகளில் கூறினார். கிரிதர்ராஜ் அதிகபட்ச எண்ணிக்கையிலான ஒற்றை இலக்க எண்களின் கூட்டல் தொகைகளை, 2 நிமிடம், 40 வினாடிகள், 4 மில்லி வினாடிகளில் விரைவாக எழுதினார்.
மாதேஷ், 100 முதல் 1 வரை உள்ள எண்களை பின்னோக்கி எழுதும் முயற்சியில், 2 நிமிடம், 24 வினாடிகள், 84 மில்லி வினாடிகளில் எழுதி முடித்தார். தனுஷாதித்யா, இரு கைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி, 1 முதல் 50 வரையிலான எண்களை 2 நிமிடம், 35 வினாடிகள், 3 மில்லி வினாடிகளில் வேகமாக எழுதினார்.
மாணவர்களின் செயல்பாடுகளை முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.