வினாடி வினா போட்டியில் சாம்பியன் பட்டம் பெத்தி செமினார் பள்ளி சாதனை
வினாடி வினா போட்டியில் சாம்பியன் பட்டம் பெத்தி செமினார் பள்ளி சாதனை
UPDATED : நவ 23, 2026 08:42 PM
ADDED : நவ 23, 2026 08:42 PM

புதுச்சேரி: புதுச்சேரி, அமலோற்பவம் லுார்து அகாடமி சார்பில் நடத்த பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டியில் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
புதுச்சேரி, அமலோற்பவம் லுார்து அகாடமி சார்பில் 17 வது ஆண்டு பள்ளிகளுக்கு இடையேயான வினாடி–வினா போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் பகுதிகளைச் சேர்ந்த 34 பள்ளிகள் பங்கேற்றன.
இப்போட்டியில், பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் பவிஷன், தருண் ஆனந்த் ஆகியோர் இளையோர் பிரிவில் 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும், மாணவர்கள் அகில், பெஞ்சமின் போர்ட் லுாயிஸ் ஆகியோர் மூத்தோர் பிரிவில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தையும் பெற்று மொத்தம் 15 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று, அமலோற்பவம் வெள்ளி விழா சுழற்கோப்பையை தட்டிச் சென்றனர்.
இந்த வெற்றியின் மூலம் பெத்தி செமினேர் பள்ளி சுழற்கோப்பையை 4வது முறையும், தொடர்ந்து 2வது ஆண்டாகவும் வென்று சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் முதல்வர் ஆரோக்கியராஜ் பாராட்டி கவுரவித்தார்.
