ADDED : அக் 03, 2024 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உழவர்கரையில் மாநில அளவிலான பெத்தாங் போட்டி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
புதுச்சேரி எஸ்.எல்.எப்., கிளப் சார்பில், மாநில அளவில் பெத்தாங் போட்டி உழவர்கரையில் கடந்த 29ம் துவங்கி நடந்து வருகின்றது. 42 கிளப்களை சேர்ந்த 307 அணிகள் கலந்து கொண்டுள்ளனர்.
போட்டி தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாக் அவுட் போட்டியில் 179 அணிகள் வெளியேற்றப்பட்டன. 128 அணிகள் களத்தில் உள்ளன.
போட்டி நிர்வாகிகள் கூறும்போது, பிரெஞ்சு பாரம்பரியமிக்க பெத்தாங் போட்டியின் அடுத்த சுற்று போட்டிகள் வரும் 6ம் தேதி நடக்கின்றது. வெற்றிப் பெறும் அணிகளுக்கு அசத்தலான பரிசுகள் வழங்க உள்ளோம் என்றனர்.

