தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பகவான் ராமகிருஷ்ணா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

 பகவான் ராமகிருஷ்ணா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

 பகவான் ராமகிருஷ்ணா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை


ADDED : மே 22, 2026 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 02:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த வடமங்கலம் பகவான் ராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 41 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

மாணவி காயத்ரி 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

அவர் தமிழ் - 98, ஆங்கிலம்- 99, கணிதம் - 100, அறிவியல்- 100, சமூக அறிவியல்- 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

மாணவி சாதனா 487 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம், மாணவி யுவஸ்ரீ - 486 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பிடித்தனர்.

சாதனை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கீதா, ராஜா, ரத்தினதேவி, சூசைவியாகுளம், ரேணுகா, சாரதா, ஜாக்குலின் மேரி ஆகியோரை புதுச்சேரி மாநில சுயநிதி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு பொருளாளர், பள்ளி தாளாளரர் சுப்ரமணியன் பாராட்டினார்.

அவர் கூறுகையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நமது பள்ளி தொடர்ந்து 21வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தாண்டு பள்ளி மாணவி காயத்ரி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.

கிராமப்புற மாணவர்களும் நகர பகுதி மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு காரணமான பள்ளி ஆசிரியர், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள் கிறேன்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us