/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரும்பை கோவிலில் இன்று பைரவர் ஜென்மாஷ்டமி
/
இரும்பை கோவிலில் இன்று பைரவர் ஜென்மாஷ்டமி
ADDED : நவ 12, 2025 06:36 AM
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சங்காபிேஷக விழா இன்று காலை நடக்கிறது.
புதுச்சேரி, கோரிமேடு அடுத்த இரும்பை டோல்கேட் அருகில் குபேரன் நகரில் அமைந்துள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள ேஷத்திரபால பைரவர் ஜென்மாஷ்டமி பிறந்த தினத்தை முன்னிட்டு, சங்காபிேஷகம் இன்று காலை நடக்கிறது.
இதையொட்டி காலை 8:00 மணிக்கு மேல் 108 வலம்புரி சங்கு ஸ்தாபனம், கலசபூஜை, மகாயாகம், பூர்ணாஹூதி, ேஷத்திரபால பைரவருக்கு கலசாபிேஷகம், சங்காபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.
மாலை 6:00 மணிக்கு மூலவர் பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை, உற்சவர் உள்புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் டிரஸ்டியினர் செய்துள்ளனர்.

