/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வேதபாரதியில் பஜன் மேளா துவக்கம்
/
புதுச்சேரி வேதபாரதியில் பஜன் மேளா துவக்கம்
ADDED : ஜன 24, 2026 06:10 AM

புதுச்சேரி: பாரதப் பண்பாட்டு அமைப்பானபுதுச்சேரி வேதபாரதி சார்பில்,முதலாம் ஆண்டுபஜன் மேளா மற்றும் நான்காம் ஆண்டு ராதா மாத விவாக வைபவம்,இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்நேற்று மாலை துவங்கியது.
முன்னதாக விக்னேஸ்வர பூஜை, வேதபாராயணம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு வேதபாரதியின் தமிழக செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலையில், வேதபாரதி பஜனோத்சவ கமிட்டி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பஜன் மேளாவின் முதல் நிகழ்ச்சியாக சென்னை,சவிதா ஸ்ரீராம் குழுவினரின் அபங்க நமா சங்கீர்த்தனம் நடந்தது. இந்த பஜன் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வரும் 26ம் தேதி வரை நடைபெறும் இந்த பஜன் மேளாவில் இரண்டாம் நாளான இன்று,காலை 8:30 மணிக்கு சங்கர வித்யாலயா மாணவர்களின் மகாமந்தரம், 9:00 மணி முதல்ஈரோடு மதுசூதன பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், மாலை 4:00 மணிமுதல் 5:00 மணி வரை குத்தாலம் ஜெயராம பக்த பஜன் மண்டலியினரின் நமாசங்கீர்த்தனம், மாலை 6:00 மணிமுதல் 9:00மணி வரை ஆதித்யா ரமேஷ் பாகவதர் குழுவினரின் தியானம் மற்றும் அபங்க திவ்ய நமாசங்கீர்த்தனம் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேதபாரதி தலைவர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.

