தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி வேதபாரதி சார்பில் பஜன் மேளா நாளை துவக்கம்

 புதுச்சேரி வேதபாரதி சார்பில் பஜன் மேளா நாளை துவக்கம்

 புதுச்சேரி வேதபாரதி சார்பில் பஜன் மேளா நாளை துவக்கம்


ADDED : ஜன 22, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வேதபாரதி சார்பில், பஜன் மேளா மற்றும் ராதா மாதவ விவாக வைபவம் நாளை 23ம் தேதி துவங்குகிறது.

புதுச்சேரி வேதபாரதி சார்பில் முதலாம் ஆண்டு பஜன் மேளா மற்றும் நான்காம் ஆண்டு ராதா மாத விவாக வைபவம், லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது.

இவ்விழா நாளை 23ம் தேதி மதியம் 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.

மாலை 3:00 மணிக்கு புதுச்சேரி வேதபாரதி குழு சார்பில், வேதபாராயணம், மாலை 3:30 முதல் 5:30 மணி வரை கிருஷ்ண பிரேமிக மண்டலியரின் அஷடபதி நமாசங்கீர்த்தனம், மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை சவிதா ஸ்ரீராம் குழுவினரின் அபங்க நமா சங்கீர்த்தனம் நடக்கிறது.

24ம் தேதி காலை 8:30 மணிக்கு சங்கர வித்யாலயா மாணவர்களின் மகாமந்தரம், காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை ஈரோடு மதுசூதன பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், மாலை 4:00 முதல் 5:00 மணி வரை குத்தாலம் ஜெயராம பக்த பஜன் மண்டலியினரின் நமாசங்கீர்த்தனம், மாலை 6:00 முதல் 9:00 மணி வரை ஆதித்யா ரமேஷ் பாகவதர் குழுவினரின் தியானம் மற்றும் அபங்க திவ்ய நமாசங்கீர்த்தனம் நடக்கிறது.

வரும் 25ம் தேதி காலை புதுவை யுவ வேதபாரதி குழுவினரின் மகா மந்தரம், காலை 9:00 முதல் 1:00 மணி வரை கோவை கவுதம் கண்ணன் பாகவதர், விட்டல் சத்யநாராயணன் பாகவதர் குழுவினர் அஷ்டபதி நாமசங்கீர்த்தனம், மாலை 4:00 முதல் 5:30 மணி வரை புதுவை யுவ வேதபாரதி குழுவினரின் நாமசங்கீர்த்தனம், மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை உடையாளூர் கல்யாணராமன் பாகவதர் குழுவினரின் பூஜை, சம்ப்ரதாய திவ்ய நாமசங்கீர்த்தனம் மற்றும் டோலோத்சவம் நடக்கிறது.

இறுதி நாளான 26ம் தேதி காலை 7:00 மணிக்கு உஞ்சவ்ருத்தி, காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை கடையநல்லுார் ராஜகோபால் பாகவதர் குழுவிரின் ஸ்ரீராதா கல்யாணம் மகோத்சவம் மற்றும் ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுச்சேரி வேதபாரதியின், பஜனோத்சவ கமிட்டி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., வேதபாரதி தலைவர் பட்டாபிராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us